இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்
அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)
சிறிலங்காவின் 25 நிர்வாக மாவட்டங்களையும் சித்திரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயக்குற்றிகள் இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு நோர்வேயும் தானும், நிதியுதவி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சுமத்தியிருந்த குற்றச்சாட்டை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொய் கூறியுள்ளதாக சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரைப் பணிகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.