மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணங்கள் கையில் உள்ளதாம் – மிரட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணக் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

“ஐயோ சிறிசேன” – புலம்புகிறார் மகிந்த

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொறியில் விழுந்து விட்டதாகவும், 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா விழுந்த பொறியில் இப்போது அவர் விழுந்துள்ளார் என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் – கட்சி தாவல்களைத் தடுக்க அவசர நடவடிக்கை

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால், அடுத்தவாரம் அமைச்சரவையை மாற்றியமைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் துறவறத்தை முடித்தார் சந்திரிகா – மைத்திரிபாலவை தலைவராக்குவேன் எனச் சூளுரை

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன – கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.