திங்களன்று கொழும்பு செல்கிறார் அஜித் டோவல் – மைத்திரியையும் சந்திக்கிறார்
சிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.


