சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்க, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோ, பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.