சிறிலங்கா அதிபருடன் பேசவுள்ளாராம் ஜெனரல் ஜயசூரிய
தனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
தனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.
ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.