சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து. ஜே.எப்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டிருப்பதாக, இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது.
சிறிலங்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் “தி எக்ஸ்பிரஸ் ரிபியூன்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானிடம் இருந்து எட்டு, ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.
போர்க்காலத்தில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.