மேலும்

மலேசியாவில் 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு யுஎன்எச்சிஆர் அனுமதி

unhcr-id2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு,  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ( யுஎன்எச்சிஆர் )அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“2010ஆம் ஆண்டு தொடக்கம், இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையான காலத்தில், மலேசியாவில், தங்கியிருப்பதற்கான 888,294 அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

இவர்களில், 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த அகதிகளாவர். மியான்மாரை அடுத்து, சிறிலங்கா அகதிகளுக்கே அதிகளவில் மியான்மாரில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில்,சிறிலங்காவைச் சேர்ந்த 26,615  அகதிகளுக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் அகதிகளுக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *