மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச்சிகிச்சை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான, கொலை வழக்கில் சாட்சி விசாரணை நேற்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, புதுடெல்லியுடன் மட்டுமன்றி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான, இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவரின் படகை கடத்திக் கொண்டு, சிறிலங்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடமராட்சி இளைஞர் ஒருவர், தமிழ்நாடு மீனவர்களால் நடுக்கடலில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது தொடர்பான, ஒளிப்பட ஆதாரங்களை கையளித்துள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறிலங்கா கடற்படை, கையளித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.