தாயகம் திரும்பிய 5 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் தஞ்சம்
திருக்கோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக படகு மூலம் இன்று தமிழ்நாட்டை வந்தடைந்தனர்.
திருக்கோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக படகு மூலம் இன்று தமிழ்நாட்டை வந்தடைந்தனர்.
இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டித்தொடரில், பங்கேற்கும் அணிகளில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய, இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அனுமதியின்றி கச்சதீவு செல்ல முயன்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.