மேலும்

Tag Archives: சீன கடற்படை

கொழும்பு துறைமுகத்தில் சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்

சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship)நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.  இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சிறிலங்காவுக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா

சீன கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ரொங்லிங்’ என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது. 

கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்

சீனக் கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

சீன கடற்படைக் கப்பல் புறப்பட்டது – அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன கடற்படைக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை விட்டுப் பறப்பட்டுச் சென்ற அதேவேளை அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

சீன கடற்படையின் மிதக்கும் மருத்துவமனை கொழும்பு வந்தது

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக, சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான, ஹெபிங்பாங்சோ நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 178 மீற்றர் நீளமும், 24 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில், 381 மாலுமிகள் உள்ளனர்.

சீன- சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து பேச்சு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சீனாவின் உயர்மட்ட கடற்படை அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.

உதவிக் குழுக்களுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

ஆட்சிமாற்றத்துக்குப் பின் முதல்முறையாக மூன்று சீனப் போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை

ஐந்து நாள் பயணமாக சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி

நாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.