மேலும்

Tag Archives: சீனா

சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வருவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்

சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனக் கடற்படை கப்பல்கள் அனுமதி கோரினால் பரிசீலிப்போம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சீனக் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி கோரினால் அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் இராணுவ ஆலோசகராகிறார் மேஜர் ஜெனரல் உபய மெடவெல

சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் சீன இராணுவ உயர்மட்டக் குழு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா மற்றும் சீன இராணுவங்களுக்கிடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், நல்லெண்ணப் பயணமாகவே சீன உயர்மட்டக்குழு சிறிலங்கா வந்துள்ளது.

மகிந்தவுடன் தொடர்புகளைப் பேணும் சீனா – பீஜிங்கின் வழமைக்கு மாறான அணுகுமுறை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடனான தொடர்புகளை, சீனா தொடர்ந்து பேணி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி – சீனாவுக்கு சிறிலங்கா தெரிவிப்பு

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சமிக்ஞை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக,சீனா அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராகச் சிறிலங்கா வந்த, அந்த நாட்டின்  உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நகர்வு – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.

கொழும்புக்கு விரைந்த சீனாவின் சிறப்புத் தூதுவர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

சீனா அவசரமாக அனுப்பி வைத்துள்ள சிறப்புத் தூதுவர் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உலகில் சிறிலங்காவுக்கு இன்று எதிரிகள் இல்லை – கிளிநொச்சியில் மைத்திரி பெருமிதம்

சிறிலங்காவுக்கு இன்று உலகில் எதிரிகளும் இல்லை, சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஜெனிவா தீர்மானம் – மீளிணக்கப்பாட்டின் தொடக்கப் புள்ளியாகுமா?

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.