கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – சீனாவுக்கு சிறிலங்கா நிபந்தனை
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய தூதுவர்களில் எட்டுப் பேர் துறைசார் இராஜதந்திரிகள் அல்ல என்றும், அரசியல் ரீதுியாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும்.
சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதில் 20 ஹெக்ரெயர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட பல உட்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில், இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார் துறைறைச் சேர்ந்த துறைமுக நிறுவனங்களை ஈடுபடுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக புதுடெல்லி அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சமத்துவமான நடத்தப்படுவதன் மூலமே, சிறிலங்காவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக வட்டியுடன் கூடிய கடன்களால், சிறிலங்கா முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது மிக மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.