சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஹோலியாங் சூ சிறிலங்காவுக்கு இந்தவாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் சனத்தொகையில், 5 வயதுக்கும், 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில், நான்கில் ஒருவர் கணினி அறிவு கொண்டவர்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு 100 வீடுகளிலும், 22 வீடுகளில், தலா ஒரு கணினியாவது இருப்பதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.
சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை, ஏற்படுத்துமாறும், அதனைத் தொடர்ச்சியாகப் பேணும் உறுதியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்குமாறும், சிறிலங்கா அதிபரிடம், சீனப் பிரதமர் லி கெகியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன அதிபர் ஜி ஜின்பின் தெரிவித்துள்ளார்.