மேலும்

Tag Archives: சிறிலங்கா

பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

புதிய ஆட்சியில் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை உருவாக்கத் தவறிவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

காத்திரமான போர்க்குற்ற விசாரணை சிறிலங்காவின் பழைய காயங்களை குணப்படுத்தக் கூடும்

காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

சிறிலங்கா, இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா

சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க  இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா உதவிச் செயலர்

ஆறு நாள் பயணமாக ஐ.நா உதவிச்செயலர் ஹோலியாங் சூ இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். இன்று மாலை 5 மணியளவில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 28 முதலீட்டுத் திட்டங்களை சிறிலங்கா மீளாய்வு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளிக்கப்பட்ட 35 முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய சிறிலங்கா அரசாங்கம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் திட்டங்களாகும்.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.