மேலும்

Tag Archives: சிறிலங்கா

உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கடன் விதிமுறைகளை மீளாய்வு செய்ய முடியாது – சீனா உறுதி

சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாடுகளின் விதிமுறைகளை மீளாய்வு செய்யத் தயாராக இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

ஜெனரல் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுத்த பீல்ட் மார்ஷல் பொன்சேகா

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சற்றுமுன் பீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீல்ட் மார்ஷல் தரத்துக்குப் பதவிஉயர்த்தப்பட்டார்.

மோடியின் யாழ். பயணம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத் தலையீடு – சீன ஆய்வாளர் குற்றச்சாட்டு

தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று, சீனாவின் சிந்தனையாளர் குழாமின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி சொல்வதையெல்லாம் செய்ய முடியாது – என்கிறது சிறிலங்கா

அண்மையில் சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியிருந்தாலும், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரெரா தெரிவித்தார்.

சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா

சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

றோவும் ராஜபக்சவும் – ஒரு முன்னாள் இந்திய ஊடகவியலாளரின் பார்வை

ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் ஷேக் ஹசினாவிடம், பேகம் கலீடா சியா தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் பற்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.