மேலும்

Tag Archives: சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார்.

19வது திருத்தம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தை, முன்னர் திட்டமிட்டவாறு நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்று இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்- உள்நாட்டு நெருக்கடியே காரணம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் நடத்தும் இரண்டு போராட்டங்கள் – ரைம் சஞ்சிகை கருத்து

சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடினமான பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகவும், ஒரு புறம் அவர், ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவும் மறுபுறத்தில் பிரதான வல்லாதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் போராடி வருவதாகவும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரை விமானப்படைத் தளத்தில் வரவேற்றார் பாகிஸ்தான் பிரதமர்

மூன்று நாள் பயணமாக இன்று முன்னிரவில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

மீனவர்களின் விவகாரம்: வியாழனன்று சிறிலங்கா அதிபர் முக்கிய சந்திப்பு

இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.

அமைச்சர்கள் பட்டாளத்துடன் இன்று சீனா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்

சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.