மேலும்

Tag Archives: கபில ஹெந்தவிதாரண

லசந்த படுகொலை பிரதான சந்தேகநபருக்கு தாய்லாந்தில் இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவியை வழங்கினார் என்று புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விரைவில் கைது

சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வந்தது எப்படி?

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைக் களத்தில் 50 முன்னாள் புலிகள்?

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.