இலங்கையர்களுக்கு வருகை நுழைவிசைவு வழங்குகிறது இந்தியா
சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் இன்று அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது.
சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat ஊடகத்தில், Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
சீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில், சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப்பின் பெயரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.