தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.






