சீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்புச் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமருக்கு மிகப் பெருமளவு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 ஆண்டு குத்தகை உரிமையைப் பெற்றுக் கொண்ட சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற சீன நிறுவனமே, சுமார் 292 மில்லியன் டொலருக்கான காசோலையை வழங்கியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் இன்று சீன நிறுவனத்திடம் முறைப்படி கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை முறைமுகத்தை செயற்படுத்துவதற்காக, அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் நிறுவனங்களுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை சீன- சிறிலங்கா கூட்டு முயற்சி நிறுவனங்களுக்கு மாற்றும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான அரசிதழை அறிவிப்பை அங்கீகரிப்பதற்காக நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று அழைக்கப்படவுள்ள கோத்தாபய ராஜபக்ச, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.
சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையும் இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை வரும் டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம் இயக்கவுள்ளது.