மேலும்

Tag Archives: அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மீண்டும் திருத்தம் – குத்தகைக் காலம் குறைப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்ற நீதிமன்றில் சிறிலங்கா படையினரை நிறுத்த அனுமதியேன் – மகிந்த சூளுரை

சிறிலங்கா படையினரை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

10 நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்காவும் உள்ளடக்கம்?

பத்து நட்பு நாடுகளில் சீனக் கடற்படையின் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழான PLA Daily ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு அமைச்சரவையில்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான,  திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு, வரும் ஏப்ரல் 25ஆம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டையில் சீன கடற்படைத் தளம் உண்மையாகிவிடும் – இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான  உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், அங்கு சீன கடற்படைத் தளமும்,  சீன விமானப்படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகி விடும் என்று இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக குத்தகைக் காலத்தைக் குறைக்க சிறிலங்கா அரசு முயற்சி

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக் காலம் தொடர்பாக சின நிறுவனத்துடன் மீள்பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

சிறிலங்கா துறைமுகங்களை பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி இல்லை – ரணில் உறுதி

ஏனைய நாடுகளின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மேலும் திருத்தங்கள் செய்ய முயற்சி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.