மேலும்

Tag Archives: பிரித்தானியா

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை – விசாரணையின்றி விலக்கியது லண்டன் நீதிமன்றம்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

ஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

பிரிகேடியர் மீதான பிடியாணை வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் – சிறிலங்கா எதிர்ப்பு

லண்டனில் சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்திடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில

சிறிலங்கா அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் குழப்பதாரிகளுக்கு பயணத் தடை, சொத்துக்கள் முடக்கம் – வெளிநாடுகள் திட்டம்?

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி தொடருமானால், இதற்குக் காரணமான அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பயணத்தடை, மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை விதிக்கும் முடிவுகளை எடுக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் அழைப்பை நிராகரித்த மேற்குலக தூதுவர்கள்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து  பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.