சிறிலங்கா குறித்த தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் “சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் முன்வைக்கப்பட்டிருந்த தீர்மான வரைவு ஜெனிவா நேரப்படி இன்று முற்பகல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வாக்கெடுப்பை சிறிலங்கா அரசாங்கமோ, அதன் ஆதரவு நாடுகளோ கோராத நிலையில், A/HRC/60/L.1 என்ற தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.