மேலும்

Tag Archives: பலாலி

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன.

பலாலிக்கு விமான சேவை – இந்திய விமான நிறுவனங்களுடன் பேச்சு

தென்னிந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமான சேவைகளை நடத்தக் கூடிய விமான நிறுவனங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியா- பலாலி இடையே குறைந்த கட்டண விமான சேவை

தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

திருச்சி, சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவை – டிசம்பருக்குள் ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பலாலிக்கு வழிதெரியாமல் திணறிய விமானி – மயிரிழையில் தப்பினார் சிறிலங்கா அமைச்சர்

விமானிக்கு வழி தெரியாததால், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் செய்த உலங்குவானூர்தி, நீண்ட நேரம் வானில் சுற்றிய பின்னர் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியாவின் சாத்திய அறிக்கை சிறிலங்கா அரசிடம் கையளிப்பு

பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. பிரதானமாக, இந்தியாவுக்கான விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகளை நாளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.