மேலும்

Tag Archives: சீனா

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

இவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்குப் போட்டியாக இந்தியாவின் பருத்திப் பாதை திட்டம்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை இணைத்து சீனா உருவாக்க எத்தனிக்கும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தைத் தோற்கடிக்க, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளை உள்ளடக்கிய பருத்திப் பாதை திட்டத்தை உருவாக்க இந்தியாவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மைத்திரியின் சீனப் பயணத்தின் போது சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து முக்கிய பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் தற்காலிக பின்னடைவு – சீனா

கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, சிறிலங்கா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்துள்ளது.

மோடியின் சிறிலங்கா பயணம் – சீன ஆய்வாளரின் பார்வை

ஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.

தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீன இராணுவத் தளம் இல்லை – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு மென்போக்கை காட்டும் சிறிலங்கா

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக கட்டுமானப் பணியின் ஒரு பகுதியை மீள ஆரம்பிப்பதற்கு, சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமாக நேற்று அனுமதி அளித்துள்ளது.

மோடியின் யாழ். பயணம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத் தலையீடு – சீன ஆய்வாளர் குற்றச்சாட்டு

தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று, சீனாவின் சிந்தனையாளர் குழாமின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.