அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.
தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு நேற்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன.
சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளான இன்று, காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் கரிநாளாக, துக்கநாளாக கடைப்பிடித்ததுடன், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.
‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.