தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




