மேலும்

Tag Archives: ஐதேக

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் நிதியுதவி பெறவில்லை – என்கிறார் மகிந்த

தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

மகிந்தவுக்கு வேட்புமனு – மற்றொரு குத்துக்கரணம் அடிப்பாராம் மைத்திரி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவை அனுமதிப்பது தொடர்பான விடயத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றொரு குத்துக்கரணம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுகிறது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக, கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மகிந்த எந்த முடிவை எடுத்தாலும் சுதந்திரக் கட்சி உடைவது உறுதி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றிரவு அல்லது நாளை இரவு சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றிரவு அல்லது நாளை இரவு கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவசரமாக கூடுகிறது ஐதேக செயற்குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒன்றிணையும் ஆளும், எதிர்க்கட்சிகள்

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று கையளிக்கப்படவுள்ளது.