மேலும்

Tag Archives: ஐதேக

2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இறுதி வாக்கெடுப்பில் வெற்றி

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட நியமனக் கடிதங்கள்

வடக்கு, கிழக்கில் ஆறு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி – பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு

புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.

சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் இரண்டு கட்டங்களாக இன்று பதவியேற்கின்றனர்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடக்கவுள்ள முதற்கட்ட நிகழ்வில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தலையிடேன் – பங்காளிக் கட்சிகளிடம் மைத்திரி உறுதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சந்திரிகா,மைத்திரி, ரணில் நேற்றிரவு சந்திப்பு – பிரச்சினைகளை தீர்க்க முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பிற்போடப்பட்டது அமைச்சரவை பதவியேற்பு

இன்று நடப்பதாக இருந்த சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 51 பேர் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை வரும் நாளை மறுநாளே பதவியேற்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர்?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.

புதிய அமைச்சரவையில் 51 அமைச்சர்கள்?

புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.