சிறிலங்கா அதிபர் இன்று மீண்டும் இந்தியா பயணம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் அவர் புதுடெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் அவர் புதுடெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா செல்லும் சிறிலங்காவின் அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையிலுள்ள ஆழ்கடல் துறைமுகத்தை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு விற்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ள தீர்மானமானது இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்க மாட்டாது.
எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.
எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில் பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.
சிறிலங்காவுடன் இன்னும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.