மேலும்

Tag Archives: இந்தியா

திருகோணமலையில் படைத்தளத்தை அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி?

திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றி படைத்தளங்களை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக்கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார்.

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – சிறிலங்கா அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவித்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எட்கா உடன்பாடு குறித்த மூன்றாவது கட்டப் பேச்சு கொழும்பில்

எட்கா எனப்படும் பொருளாதார  தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சு வரும் 2017 ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிகாரிகள் குழு புதுடெல்லி விரைவு

மீனவர்களின் விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் அதிகாரிகள் குழுவொன்று இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்

பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.