மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீவிபத்து

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில்  இன்று பிற்பகல்  பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இறப்பர் களஞ்சியத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை மறுநாள் யாழ். வரும் ஐ.நா பொதுச்செயலர் – விக்னேஸ்வரனை தனியாக சந்திக்கமாட்டார்

நாளை மறுநாள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனியாகச் சந்தித்துப் பேசமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை

சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுத்துள்ளவர்களைக் கண்டறியும் தீவிர விசாரணைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்கா கணினி அவசர தயார்நிலைக் குழுவும், ஈடுபட்டுள்ளன.

இன்னொரு போரை கூட்டமைப்பு விரும்பவில்லை – மாத்தறையில் சம்பந்தன்

நாட்டை பிளவுபடுத்துவதையோ, இன்னொரு போரையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

வடக்கு, கிழக்கில் அனுமதியின்றி பௌத்த விகாரைகள் கட்டப்படுவது மற்றும் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது குறித்தும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளது.

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்ததாக வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார் என்று புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த அமெரிக்க போர்க்கப்பல் நாளை கொழும்பு வருகிறது

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40)  நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் திட்டம் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற திட்டம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் 49 வெளிநாட்டுப் படையினர்

சிறிலங்கா இராணுவம் அடுத்தவாரம் நடத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில், 49 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.