மேலும்

நாளை சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

200 புலிகளைத் தப்பிச் செல்லவிட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரி

முன்னைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து, 200 வரையான விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை

வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார் என்பதை, நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள சமரவீர

உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போர் தொடுத்த 17 வயது மாணவன் கைது

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி, அதிலிருந்து தரவுகளை அழித்து, சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை விடுத்த குற்றச்சாட்டில், 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வந்தது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி விநியோகக் கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உதவி மற்றும் விநியோகக் கப்பலான, யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நிமால், அற்புதன், மகேஸ்வரி – ஈபிடிபியின் படுகொலைகளை அம்பலப்படுத்திய மூத்த உறுப்பினர்

ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே,எஸ்.ராஜா மற்றும் சட்டவாளர் மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், சிறிலங்கா படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி ஈடுபட்டதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.