மேலும்

ஆப்கானுக்கான சிறிலங்கா தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளார்.

சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்தவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் ரணில்

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த

புதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா

கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவித்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்

கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.

6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர்

சிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.