மேலும்

குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளது.

சிறிலங்கா- பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்!

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தின் மீது இந்தியா ஆர்வம்?

மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இந்திய முதலீட்டாளர் ஒருவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று கடற்படை அதிகாரிகள் கைதாகின்றனர்

2008-2009 காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேலும் 3 சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் சத்தியலிங்கம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் விலகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு அமைய அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுமாலை அனுப்பி வைத்தார்.

ஆவா குழுத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது

கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.