மேலும்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வெறுமையாகக் கிடந்த உறுப்பினர்களின் ஆசனங்கள்

சிறிலங்காவின் முதலாவது நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மிகக் குறைந்தளவிலான உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகிந்த ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை- என்கிறார் பசில்

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியில் மாற்றம் இருக்கக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா

மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை  ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம்  அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியா அமைக்கும் துறைமுகத்தினால் கொழும்புக்கு அச்சுறுத்தல்

இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்க எச்சரித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 14 இடங்கள் சறுக்கியது சிறிலங்கா

2017-18ஆம் ஆண்டுக்கான பூகோள போட்டித் திறன் அறிக்கையில், சிறிலங்கா 85 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.