மேலும்

301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி

உள்ளூராட்சி சபைகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளது.

சரத் பொன்சேகா – காமினி லொக்குகே நாடாளுமன்றத்தில் தகாத சொற்களால் மோதல்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயும் தகாத வார்த்தைகளால் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது – சிறிலங்கா மத்திய வங்கி அறிவிப்பு

எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் ‘ஓக்கி’ புயலின் கோரத் தாண்டவம்

வங்கக் கடலில் உருவான ஓக்கி (OCKHI) புயல் சிறிலங்காவைக் கடந்து சென்ற போது, வீசிய சூறைக்காற்றினாலும், கொட்டிய மழையினாலும், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்

அமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான பொருளாதாரத் தலையீட்டைக் காண்பிப்பதானது சீனாவை மேலும் உறுதியான பூகோளப் பங்களிப்பை நோக்கி இழுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டு அரசில் இருந்து விலக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு

கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளதால், கூட்டு எதிரணியுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் முடங்கியுள்ளன.

அரசிதழுக்கு எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ள இணக்கம் – உள்ளூராட்சித் தேர்தலுக்கு பச்சைக்கொடி

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.