மேலும்

சிறிலங்காவில் இராணுவத் தளம்  – அமெரிக்கா மறுப்பு

சிறிலங்காவில் தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

லசந்தவின் மகள் சிறிலங்கா வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மீண்டும் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை அமைத்தது பிரித்தானியா

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய துதரகத்தில், வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை பிரித்தானியா மீண்டும் அமைத்துள்ளது.

அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு உடன்பாடு ஆபத்தானது – தயாசிறி

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றின் மீது  மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சீனக்குடா எண்ணெய் தாங்கிகளின் மீது கைவரிசை காட்டிய இரும்பு திருடர்கள்

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்து எண்ணெய்த் தாங்கிகள் இரண்டை, இரும்புத் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

தமிழ் மக்களையும் உறவு வலயத்துக்குள் வைத்திருக்க விரும்பும் சீனா

சிறிலங்கா  மக்களுடனான தமது உறவு சிங்கள மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தமிழ் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும், சீனா தெரிவித்துள்ளது.