மேலும்

ஐ.நா தீர்மானம் வலுவான அனைத்துலகத் தலையீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

சிறிலங்காவில் போரின் போது, இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறை, வலுவான அனைத்துலகத் தலையீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அமைய வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன? – இராஜாங்கத் திணைக்களம் விளக்கம்

சிறிலங்காவில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரின் விருந்துபசாரத்தில் மைத்திரி – ஒபாமா சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முதல்முறையாகச் சந்தித்துப் பேசினார்.

ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

சிறிலங்கா சட்டங்களின் கீழேயே எல்லா விசாரணைகளும் நடக்கும் என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக,  விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் குறித்து மேஜர் ஜெனரலிடம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட நம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை் விசாரணை நடத்தியுள்ளனர்.

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உள்ளகப் பொறிமுறையிலேயே விசாரணை – வெளிநாட்டு தலையீடு இருக்காது என்கிறார் ரணில்

மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்றும், அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அவுஸ்ரேலியா முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.