மேலும்

தமிழீழம், புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

புதிய அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார்.

‘ரோ’வின் குகையாகி விட்டது யாழ்ப்பாணம் – அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்திருப்பதாகவும், வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.

விவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.

இத்தாலி செல்ல முயன்ற விமல் வீரவன்ச கட்டுநாயக்கவில் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் சகா பிரசாந்தனும் கைது – இரட்டைப் படுகொலை வழக்கில் சிக்கினார்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலருமான பூ.பிரசாந்தன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது – ஒரேகுரலில் சிங்களக் கட்சிகள்

ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளும், சிறிலங்கா படையினரைத் தண்டிக்கக் கூடாது என்று சிங்களக் கட்சிகளும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தின.

ஜெனிவா தீர்மானம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் – யோசனைகளை சமர்ப்பிக்க காலஅவகாசம்

ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவை சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை

சிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

பிள்ளையானுக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.