மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’

கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது

‘சிறிலங்காவில் சீனாவின் இருப்பு தனக்கு பாதுகாப்பற்றதென இந்தியா கருத வேண்டியதில்லை’ – முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால

சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா : ‘அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்’

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்?

சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறிலங்காவில் சீனாவின் உறவைப் பலப்படுத்தும் ‘நீர் வழங்கல் திட்டம்’

சீனா தனது ‘மென்மையான அதிகாரத்தைப்’ பயன்படுத்தி கொழும்புடன் தனது உறவை மேலும் ஆழமாக்குவதற்காக தற்போது சிறிலங்காவில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும்

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

‘சிறிலங்கா அதிபர் அவர்களே உங்கள் பற்றிய கோப்புகள் எம்மிடமும் உள்ளன’

இந்த நாட்டில் நடந்த உண்மைகளைப் பொய்கள் மறைத்திருக்கலாம். ஆனால் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது. சிறிலங்காவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டின் அழிவுக்கும் பொதுச் சொத்துக்களை ஊறுவிளைவித்தமைக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.