சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.




