மேலும்

பிரிவு: செய்திகள்

குடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் – வழக்கமான பயிற்சி என்கிறது விமானப்படை

சிறிலங்கா விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்திய நிலையில், அது ஒரு வழக்கமான பயிற்சி நடவடிக்கை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

ஞானசார தேரர் மீது பாய்ந்தது சாட்சிகள் பாதுகாப்பு சட்டம்

அண்மையில் உருவாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 7000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.

மகிந்த கால கொலைகளுடன் தொடர்புடைய கப்டன் திஸ்ஸ யாழ். இராணுவ முகாமில் தடுத்து வைப்பு

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்த, போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ என்று அழைக்கப்படும், கப்டன் எல்.எம்.ரி.விமலசேன யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முடிவடைந்தது பிரகீத் கடத்தல் விசாரணை – கைது செய்யப்படுகிறார் கோத்தா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித சேனாரத்னவின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து சிங்கப்பூரில் சிகிச்சை

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீபா உடன்பாட்டுக்கு மறுத்ததால் தான் ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தது இந்தியா – ரம்புக்வெல

இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாடு (சீபா) செய்து கொள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்தமையினால் தான், இந்திய உளவுப் பிரிவான ரோ, சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

சீனாவுடன் வலுவான கூட்டை எதிர்பார்க்கிறதாம் சிறிலங்கா

ஏனைய நாடுகளுடன் பொருளாதார உடன்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், சீனாவுடன் வலுவான கூட்டை சிறிலங்கா பேண வேண்டியுள்ளதாக சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீரவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த மயமாக்கப்பட்ட சட்டமாஅதிபர் திணைக்களம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்ற போது, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமா அதிபர் திணைக்களம் எந்த அமைச்சின் கீழ் என்பது குறிப்பிடப்படவில்லை.