மேலும்

பிரிவு: செய்திகள்

இந்தியா எச்சரித்த தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர சிறிலங்கா அனுமதி

தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து குருவாயூரில் ரணில் வழிபாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில், தனது எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து, வழிபாடு செய்தார்.

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்கிறார் பசில்

மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.

திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்த நடவடிக்கை – டச்சு நாடாளுமன்றத்தில் அஜித் பெரேரா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்- உள்நாட்டு நெருக்கடியே காரணம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தும் சிறிலங்கா நிதி அமைச்சர்

அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு – பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆராய்வு

சிறிலங்காவுக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் யி ஜியான்லியாங், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு  நடத்தியுள்ளார்.

மகிந்தவின் உதவியில் பதவியைப் பிடித்த பான் கீ மூன் – கொரிய நாளிதழ் அதிர்ச்சித் தகவல்

2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர்

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.