மேலும்

பிரிவு: செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவுக்கு 16 திருவள்ளுவர் சிலைகள் – சென்னையில் அன்பளிப்பு

சிறிலங்காவில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா

தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் சிறிலங்காவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

சிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி – ஜப்பானிய ஊடகத்துக்கு மகிந்த சூசகமாக தெரிவிப்பு

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தாம் போட்டியிடக் கூடும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்யக் கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பான உத்தரவு

தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் எவரையேனும், சித்திரவதை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கண்டிப்பான உத்தரவுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும், காவல்துறைக்கும் விடுத்துள்ளார்.

இந்திய உதவியுடன் திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரியது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ள சிறிலங்கா காவல்துறை, அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

படகில் தத்தளித்த தமிழ் அகதிகளை தரையிறங்க இந்தோனேசியா அனுமதி

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது.

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா – காணொளி மூலம் இணைந்தார் இந்தியப் பிரதமர்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளித் தொழில்நுட்பத்தின் மூலம் கலந்து கொண்டார்.