மேலும்

பிரிவு: செய்திகள்

அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு,  திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும்,  சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும்,  சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரமாக இன்று நாடு திரும்புகிறார் ரணில்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த ஏற்படுத்திய அனர்த்தத்தை அடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.

குப்பை மேடு சரிவினால் உயிரிழந்தோர் 30 ஆக அதிகரிப்பு – 30 பேரைக் காணவில்லை

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை குப்பைமேடு சரிந்து விழுந்ததில் மரணமானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உத்தரவிட்டால் காணிகளை விடுவிக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டால், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீன கடற்படைத் தளம் உண்மையாகிவிடும் – இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான  உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், அங்கு சீன கடற்படைத் தளமும்,  சீன விமானப்படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகி விடும் என்று இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவுக்காகவே புலிகளுடன் போரிட்டேன் – மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் இந்தியாவுக்காகவே போரை நடத்தியதாகவும் இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை சக்திவாய்ந்த நாடு என்கிறார் வியட்னாம் பிரதமர்

சிறிலங்காவை, இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார் வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்.

நவீன தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் வாங்குகிறது சிறிலங்கா

680 கோடி இந்திய ரூபா பெறுமதியான நவீன தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.

சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார்? – சிங்கள ஊடகம் சூசக தகவல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று சூசகமான தகவலை வெளியிட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்குள் 100 பேர் புதையுண்டனர்?

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை 300 அடி உயரமான குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.