மேலும்

பிரிவு: செய்திகள்

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வடக்கில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அறிவிப்பு

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கில் இன்று தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடலில் தத்தளித்த 2 யானைகளை மீட்டது சிறிலங்கா கடற்படை

திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

கறுப்பு யூலை நினைவுகளுடன் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

வல்லிபுரக்கோவிலில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று பருத்தித்துறை- வல்லிபுரக்கோவில் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார்.

நல்லூர் துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட தாக்குதல் அல்ல – சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

நல்லூரில் நேற்றுமாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் போராளி?

நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, சிறிலங்கா காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூர் துப்பாக்கிச் சூடு – அனலைதீவைச் சேர்ந்த இருவர் கைது

நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

“நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்“ – சம்பவத்தை விபரிக்கிறார் நீதிபதி இளஞ்செழியன்

தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தெரிவித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுமாலை நடந்த தாக்குதல் தொடர்பாக விபரித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி பலி

நல்லூரில் நேற்று மாலை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜன்ட் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.