மேலும்

பிரிவு: செய்திகள்

கூட்டுப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் எயர் மார்ஷல் கோலித குணதிலக

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக- விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் அடுத்தவாரம் தனது புதிய பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ்.நீதிமன்றத் தாக்குதலை அடுத்து வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்ல தடைவிதித்த அரசாங்கம்

யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, வடக்கிற்கு எரிபொருள் கொண்டு செல்வதை அரசாங்கம் இடைநிறுத்தியதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

அரசியலமைப்புச்சபைக்கு சம்பந்தன், ராதிகா குமாரசாமி பெயர்கள் பரிந்துரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 10 பேர் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். கடுமையான விவாதங்களின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்? – கொழும்பு வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில  வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேன்ஸ் விழாவில் ஈழப்போரின் பின்புலத்தைக் கொண்ட ‘தீபன்’ திரைப்படம் – விருதுக்குப் போட்டி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஓடியேட்டால் இயக்கப்பட்ட ‘தீபன்’ (Dheepan)  என்கின்ற திரைப்படம் வியாழக்கிழமை இடம்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

போர்க்குற்றமிழைத்த சிறிலங்கா படையினரை எம்மண்ணில் ஆளவிட முடியாது – முதலமைச்சர்

போர்க்குற்றமிழைத்த சிறிலங்கா இராணுவத்தினரைத் தொடர்ந்து எம் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆளவிடுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு யாழ்.நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புங்குடுதீவில் நடந்தது என்ன?- சட்டபீடாதிபதி தமிழ்மாறன் விளக்கம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள்,  தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார்.

புலிக்கொடி புரளி பரப்பி தெற்கு மக்களை தவறாக வழிநடத்துகிறார் மகிந்த – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவோ எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களோ கூறுவதுபோல, வடக்கில் எங்குமே, கடந்த மே 18ம் நாள் புலிக்கொடி பறக்கவிடப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.