மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா கடற்படையுடன் மீண்டும் கூட்டு போர்ப்பயிற்சியை ஆரம்பித்தது அமெரிக்க கடற்படை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்கடத்தலுடன் முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு – நீதிமன்றில் காவல்துறை தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

மிகவிரைவில் நாடாளுமன்றம் கலைப்பு – உறுதி செய்தார் மைத்திரி

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவ வேண்டியுள்ளது – அதுல் கெசாப்

சிறிலங்காவில் வாழும் பல்வேறு இன மற்றும் மதக்  குழுக்களிடையே  நிலையான அமைதியையும், கூட்டுறவையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருப்பதாக, சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக அமெரிக்க அதிபரால் முன்மொழியப்பட்டுள்ள அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் குறைக்கக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் ஒன்றும் கொம்புவைத்த வேற்றுக் கிரகவாசிகள் அல்ல- மங்கள சமரவீர

புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்கள் அல்ல என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

அமெரிக்கா குறித்த அமெரிக்க அறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான விடயமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம் – எச்சரிக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

அமெரிக்க கடற்படையுடனான போர்ப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப்படகு கவிழ்ந்தது

அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார்.