மேலும்

பிரிவு: செய்திகள்

கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவார் மகிந்த?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போட்டியில் குதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த எந்த முடிவை எடுத்தாலும் சுதந்திரக் கட்சி உடைவது உறுதி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்தவின் முடிவு இன்று – மைத்திரியின் அறிக்கையால் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது முடிவை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.

சரணடைந்த, காணாமற்போனோர் விபரங்களை ஜெனிவாவில் வெளியிடவுள்ளதாம் சிறிலங்கா

கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக மைத்திரி ஏற்கவில்லை – அதிபர் செயலகம் அறிக்கை

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரிக்கவோ அல்லது, பிரதமர் வேட்பாளராகப் பெயரிடவோ இல்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு படைத்தளங்களில் சிறிலங்காவின் புதிய இராஜதந்திரிகள்

வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொழும்பிலுள்ள மனிதாபிமான விவகாரப் பணியகத்தை மூடுகிறது ஐ.நா

சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.

மகிந்தவிடம் மண்டியிடுகிறார் மைத்திரி? – நிமால் மூலம் முடிவை அறிவித்தார்

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிப்பதா என்பது தொடர்பான தமது முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.